டிசம்பர் 25,2010
தலைவாசல் அருகே குடிபோதையில் தாயை "தகாத' வார்த்தையில் திட்டியதால், தந்தையை அடித்து கொன்ற மகனை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பெரியேரி கிராமம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (54). அவர், வரகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.சுப்ரமணியனுக்கு மனைவி தமிழ்செல்வி (45), மகன்கள் லெனின் (22), ஸ்டாலின் (19) ஆகியோர் உள்ளனர். சத்துணவு அமைப்பாளர் பணிக்கு சென்று விட்டு சுப்ரமணி, நாள்தோறும் குடிபோதையில் மனைவி, மகன்களை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.நேற்று முன்தினம் சத்துணவு அமைப்பாளர் சுப்ரமணியன், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புரு÷ஷாத்தமன் தலைமையிலான போலீஸார், சுப்ரமணியன் உடலை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மருத்துவ பரிசோதனையில் சுப்ரமணியத்தின் நெஞ்சு எலும்புகள் உடைந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தலைவாசல் போலீஸார் விசாரணை நடத்தினர்.அதில், "மகன் ஸ்டாலின் தந்தையிடம் பைக் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு சுப்ரமணியன், அவரது மனைவி தமிழ்செல்வியை "தகாத' முறையில் பேசியுள்ளார். ஆத்திரமடைந்த மற்றொரு மகன் லெனின், சுப்ரமணியனின் நெஞ்சில் உதைத்துள்ளார். மயங்கி விழுந்த சுப்ரமணியன் அதே இடத்தில் இறந்துள்ளார் என்பது தெரியவந்தது. தலைவாசல் போலீஸார், தந்தையை அடித்து கொன்ற மகன் லெனினை கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக