-O- பெரியேரி கிராமம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஊர்ப்பொதுமக்கள்.......பெரியேரி வீரமணி (9047235909 - 8144322737 - 9543473522)...
-O- வீரமணி பெரியேரி -O- திருவள்ளுவர் பல்கலைகழத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.பார்க்க இங்கே சொடுக்கவும்... -O- பெரியேரியில் கடன் தொல்லையால் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் காதில் விஷத்தை ஊற்றி விட்டு தற்கொலைக்கு முயன்ற பால் வியாபாரி. -O- பெரியேரியில் மழை வெளுத்துக்கட்டியது மக்கள் வீட்டிலேயே முடக்கம் -O- பெரியேரி வடிவேல் திடீர் உடல்நல பாதிப்பு, சேலத்தில் அனுமதி... -O- பெரியேரி உமாபிரியதர்ஷினி - திருச்சி வணங்காமுடி திருமண கோஷ்டி சென்றபஸ் கவிழ்ந்து 30 பேர் காயம். Powered By வீரமணி பெரியேரி


சனி, 20 அக்டோபர், 2012

புளியன் மரத்தை வெட்டி விற்பனைசெய்த ஆர்.ஐ.,: விவசாயிகள் புகார்

தலைவாசல்: தலைவாசல் அருகே, நீரோடை பகுதியில் முறிந்து விழுந்த ராட்சத புளியன் மரத்தை, ஆர்.ஐ., உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள், ஏலம் விடாமல், விற்பனை செய்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, தலைவாசல் நத்தக்கரை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கருப்பண்ணன், சுப்ரமணி ஆகியோருக்கு, நீரோடை அருகில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தின் அருகில் உள்ள, கருப்பையா கோவில் மற்றும் பெரியேரி ஏரிக்குச் செல்லும் நீரோடை பகுதியையொட்டி, மூன்று, "ராட்சத' புளியன் மரங்கள் உள்ளன.சில தினங்களுக்கு முன், இடியுடன் பெய்த மழையால், கோவில் எதிரே இருந்த, 200 அடி உயர புளியன் மரம், பாதியோடு முறிந்து விழுந்தது. தலைவாசல் பிர்க்கா ஆர்.ஐ., பாலாஜி உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள், முறிந்து கிடக்கும் மரத்தை ஏலம் விடுவதற்கு, ஆத்தூர் தாசில்தாருக்கு பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில், சாய்ந்த மரத்தில் இருந்து, 11 டன் எடை கொண்ட ஒரு கிளையை மட்டும் வெட்டி, இரண்டு வாகனங்களில் கடத்திச் சென்று, ஆர்.ஐ., பாலாஜி விற்பனை செய்ததாக, புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கேட்ட விவசாயிகளை, வருவாய் அலுவலர்கள், பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மூலம் ஆர்.ஐ., மிரட்டியதாக கூறப்படுகிறது.சம்மந்தப்பட்ட விவசாயிகள், மாவட்ட கலெக்டர், ஆத்தூர் ஆர்.டி.ஓ.,வுக்கு புகார் மனு அனுப்பினர். அதையடுத்து, தாசில்தார் தங்கராஜ் தலைமையிலான, துணை தாசில்தார் கலையரசன் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள், மரம் கடத்தியது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.இதுகுறித்து, தலைவாசல் ஆர்.ஐ., பாலாஜி கூறியதாவது:முறிந்து விழுந்த புளியன் மரத்தை, 500 ரூபாய்க்கு ஏலம் விடுவதற்கு, தாசில்தாருக்கு பரிந்துரை செய்தேன். சாலையில் முறிந்து கிடந்த புளியன் மரத்தின் ஒரு கிளையை, ஜே.சி.பி., மூலம் அகற்றினோம். அதற்கான செலவுத் தொகைக்கு, ஒரு கிளை மரத்தை வெட்டி, 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்தேன்.
தாசில்தார் உத்தரவுப்படி, புளியன் மரம் ஏலம் விடப்படும். ஏலம் விடாத புளியன் மரத்தை வெட்டி, விற்பனை செய்தது தவறுதான், நான் புதிதாக வந்த ஆர்.ஐ., என்பதால் தெரியவில்லை, இதுப்பற்றி செய்தி எதுவும் வெளியிட வேண்டாம்.இவ்வாறு கூறினார்.ஆத்தூர் ஆர்.டி.ஓ., முத்துராமலிங்கம், தாசில்தார் தங்கராஜ் ஆகியோர் கூறுகையில், "புளியன் மரம் ஏலம் விட வேண்டும், அந்த மரத்தின் கிளையை ஆர்.ஐ., வெட்டி விற்பனை செய்திருந்தால், ஆர்.ஐ., மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக