சேலம் வனக் கோட்டத்தில், அனுமதி பெறாமல் இயங்கிய, 50க்கும் மேற்பட்ட மர அறுப்பு மில்களை, வனத்துறை அதிரடியாக மூடியது.சேலம் மாவட்ட வனத்துறையின் நிர்வாக வசதிக்காக, ஆத்தூர் மற்றும் சேலம் என, இரு வனக்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆத்தூர் கோட்டத்தின் கீழ், வாழப்பாடி, ஆத்தூர், கல்ராயன்மலை கருமந்துறை, தம்மம்பட்டி ஆகிய வனச்சரகங்களும், சேலம் வனக்கோட்டத்தில், சேலம் வடக்கு, தெற்கு, மேட்டூர், டேனிஷ்பேட்டை, ஏற்காடு ஆகிய வனச்சரகங்களும் செயல்பட்டு வருகின்றன.ஆத்தூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் மர அறுப்பு மில்களுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பே கட்டுப்பாடுகளை விதித்த வனத்துறை, முறையாக விண்ணப்பித்து, அனுமதி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியது. அதனால், ஆத்தூர் வனக்கோட்டத்தில் இயங்கி வரும் பெரும்பாலான மர அறுப்பு மில்கள், சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றுவதாக உறுதியளித்து, அனுமதி பெற்று இயங்கி வருகின்றன.
ஆனால், சேலம் வன கோட்டத்தில், மர அறுப்பு மில்களை கட்டுப்படுத்த வனத்துறை முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதனால் ,புற்றீசல்கள் போல நூற்றுக்கும் அதிகமான மர அறுப்பு மில்கள் தோன்றின. ஏற்காடு உள்ளிட்ட பகுதியில் இருந்து மரத்தை வெட்டி கடத்தி வந்து, அறுத்து விற்பனை செய்வதாக, வன ஆர்வலர்களின் குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்ததால், மர அறுப்பு மில்களை கட்டுப்படுத்த, வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வனத்துறையிடம் முறையான விண்ணபித்து அனுமதி பெறாத, 50க்கும் மேற்பட்ட மர அறுப்பு மில்களை மூட, வனத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்க, உச்சநீதிமன்றம் அறிவுரைகளை பின்பற்றி, வனத்துறைக்கு விண்ணப்பித்து, அனுமதி பெற்ற பின்னரே, மர அறுப்பு மில்களை இயக்க வேண்டும் எனவும், அதன் உரிமையாளர்களுக்கு, வனத்தறை உத்தரவிட்டுள்ளது.ஒரு மாதத்திற்கு மேலாக, சேலம் வனக்கோட்டத்தில், 50க்கும் மேற்பட்ட மர அறுப்பு மில்கள் இயக்க முடியாமல் மூடிக்கிடப்பதால், கட்டுமானத்திற்கு பயன்படும் மரச்சாமான்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வனத்துறையிடம் விண்ணப்பித்து அனுமதி பெறும் முயற்சியில், மர அறுப்புமில் உரிமையாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.சுற்றுச்சூழலை பாதுகாக்க, மர அறுப்பு மில்களை கட்டுப்படுத்துவது அவசியம் எனினும், அரசு விதிகளை பின்பற்றி இயங்குவதாக உறுதியளித்து விண்ணப்பிக்கும் மர அறுப்பு மில்களுக்கு தாமதமின்றி அனுமதி வழங்கி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என, அறுப்பு மில் உரிமையாளர்கள், வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சேலம் மாவட்ட செய்திகள்:
பொது
- 1.பூலாம்பட்டி ஸ்டேஷனில்எஸ்.பி., திடீர் ஆய்வுபோலீஸாருக்கு பாராட்டு
- 2.மின்வாரிய அலுவலர்கள் சிறை பிடிப்பு5 மணி நேரத்துக்கு பின் போலீஸ் மீட்பு
- 3.கைலாஷ் மானசரோவர் பள்ளி மாணவர் சேர்க்கை
- 4.கோகுலம் மருத்துவமனை 25வதுஆண்டு விழா அக்.,23ல் துவக்கம்
- 5."டெங்கு' ஷாக்; அதிகாரிகள் "அலர்ட்'
சம்பவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக