தலைவாசல்:
தலைவாசல் அருகே, திருமணத்துக்குச் சென்ற பஸ், மலைப்பாதையில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானது. இதில், புதுமண தம்பதி உள்பட, 30 பேர், காயமடைந்தனர்.
சேலம்
மாவட்டம், ஆத்தூர் அடுத்த, தலைவாசல் வடசென்னிமலையில், பிரசித்தி பெற்ற
பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், பெரியேரி கிராமத்தை சேர்ந்த
பாஸ்கரன் மகள் உமாபிரியதர்ஷினி 23, என்பவருக்கும், திருச்சி, ஏர்போர்ட்
பகுதியை சேர்ந்த வணங்காமுடி 27, என்பவருக்கும், நேற்று(28.10.2012) காலை, 7.30
மணியளவில் திருமணம் நடந்தது.
பின், புதுமண தம்பதி மற்றும் உறவினர்கள்,
30க்கும் மேற்பட்டோருடன், சகுந்தலா என்ற தனியார் பஸ், மலைப்பாதை வழியாக
கீழே இறங்கியது. காலை, 8.30 மணியளவில், ஆறாவது கொண்டை ஊசி வளைவில், பஸ்
திரும்பும்போது, ஸ்டீயரிங் கட்டானதால், கட்டுப்பாட்டை இழந்த பஸ், 20 அடி
பள்ளத்தில் தலைகீழாக இறங்கி நின்றது.
இதில், புதுமண தம்பதி வணங்காமுடி,
உமாபிரியதர்ஷினி மற்றும் பஸ்சில் வந்த, 30 பேரும், லேசான காயத்துடன்உயிர்
தப்பினர். அவர்கள், ஆத்தூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.தகவலறிந்த, ஆத்தூர் தாசில்தார் தங்கராஜ் தலைமையிலான,
காட்டுக்கோட்டை ஆர்.ஐ., பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று
விசாரணை நடத்தினர்.தலைவாசல் போலீஸார், விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக